திமுக கொடுத்து வரும் தொடர் டார்ச்சர்… மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறுமா ? இன்று அதிரடி முடிவு !!

By Selvanayagam PFirst Published Feb 25, 2019, 7:49 AM IST
Highlights

திமுக  தலைமையிலான கூட்டணியில், மதிமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு, தலா, ஒரு இடம் ஒதுக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தலுக்குப் பின், அணி மாறாமல் தடுக்கும் விதமாக இரு கட்சிகளும், 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என, திமுக  நிபந்தனை விதித்துள்ளதால் அந்த இரு கட்சிகளும் கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரசுக்கு, புதுச்சேரி உட்பட, 10 தொகுதிகளும், முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதம், 29 தொகுதிகள் உள்ளன.

இவற்றில், மதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய, நான்கு கட்சிகளுக்கும், தலா, ஒரு தொகுதியை ஒதுக்கி, மீதமுள்ள, 25 தொகுதிகளில் போட்டியிட, திமுக திட்டமிட்டிருந்தது.

அதே நேரத்தி தேதிமுக  தலைவர், விஜயகாந்த்தை, அவரது வீட்டில், ஸ்டாலின் சந்தித்து பேசினார்.இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணிக்கு, தேமுதிகவை இழுக்க, ரகசிய பேச்சு நடந்து வருகிறது என ஒரு செய்தி பரவியது.
இதையடுத்து தேமுதிகவுக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 22 தொகுதிகளில் திமுக போட்டியிட தயாராக உள்ளதுஎனவும் கூறப்படுகிறது.
.
ஆனால் மதிமுக , மூன்று தொகுதிகளை கேட்கிறது. இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், குறைந்தபட்சம், தலா, இரு தொகுதிகளாவது வேண்டும் என, அடம் பிடிக்கின்றன. 
இந்த கோரிக்கை குறித்து, பரிசீலித்து வரும், தி.மு.க., அதிரடி நிபந்தனை விதித்துள்ளது. 'அதன்படி ம.தி.மு.க., - வி.சி.,க்கள், உதயசூரியன் சின்னத்தில் கட்டாயம் போட்டியிட வேண்டும்' என, நிர்பந்தம் செய்கிறது.

தேர்தலுக்கு பின், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும்போதும், தேசிய அளவில் அணிகள் மாற்றம் ஏற்படும்போதும், ஒரு, எம்.பி., பதவி கூட, பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக மாறிவிடும். எனவே, அத்தகைய நேரத்தில், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள், அணி மாறுவதை தடுக்கும் வகையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை, தி.மு.க.,விதித்துள்ளது.

இதையடுத்து திமுகவின் புது நிபந்தனையைஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க, ம.தி.மு.க., உயர் நிலைக்குழுக் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், கட்சியின் தலைமையகமான,தாயகத்தில் கூடுகிறது.

அப்போது, திமுக  நிபந்தனையை ஏற்று கூட்டணியில், மதிமுக நீடிக்குமா; வெளியேறுமா அல்லது வேறு ஏதும் சமரச முயற்சிகளில் ஈடுபடுமா என்பது தெரிய வரும்.

இதற்கிடையே, நிபந்தனையை ஏற்காமல், தொகுதி எண்ணிக்கையில் முரண்டு பிடிக்கும் கட்சிகளை வெளியேற்றி, தே.மு.தி.க.,க்கு சற்று அதிக தொகுதிகளை கொடுத்து, கூட்டணிக்குள் இழுத்து போடவும், ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அந்தக் கூட்டணிக்குள் குழப்பம் நீடிப்பதால் மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலை வரலாம் என கூறப்படுகிறது.

click me!