அதிமுக கூட்டணியில் இணையும் தமிழ் மாநில காங்கிரஸ் !! வாசனுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா ?

Published : Feb 25, 2019, 06:54 AM IST
அதிமுக கூட்டணியில் இணையும் தமிழ் மாநில காங்கிரஸ் !!  வாசனுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா ?

சுருக்கம்

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துள்ள நிலையில் அடுத்த தமாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இதற்கான பேச்சு வார்த்தை முடிந்து விரைவில் அறிவிப்பு வெளிவர உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தர ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதே போல் அதிமுக – பாஜக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில்  தமிழ் மாநில காங்கிரசுடன் நடத்தி வந்த பேச்சு வார்த்தையில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், ஒரு மாநிலங்களவைத் உறுப்பினர் பதவியும் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு முடிந்ததும், தமாகாவுடன் அதிகாரப்பூர்வமான பேச்சை தொடங்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?