
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தேமுதிக நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோர் மதுசூதனன் முன்னிலையில் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.
ஜெயலலிதாவின் நிரந்தர தொகுதி என தீர்மானிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி அவரது மறைவிற்கு பிறகு காலியாகவே இருந்தது. ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்தது. பின்னர், சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து கொண்டே வந்தார்.
இந்நிலையில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் சசி தரப்பில் தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதணும் போட்டியிடுகின்றனர். இதில் தினகரனுக்கு நிகராக மதுசூதனன் பல நெருக்கடியும் மூச்சு தினரலையும் கொடுத்து வருகிறார்.
அது புரியாமல் ஆளாளுக்கு ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்களையே ஆதரிக்கின்றனர் என்று புளுகுகிறார்கள் ஒ.பி.எஸ் தரப்பும், சசிகலா தரப்பும்.
அதன் ஒருபகுதியாக ஆர் கே நகர் தொகுதி 39-வட்டத்தில் உள்ள தேமுதிக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று வேட்பாளர் மதுசூதனன் முன்னிலையில் அதிமுக பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.