மாஸ் அறிவிப்பு... இந்தியாவில் இதுவரை இல்லாத திட்டத்தை வெளியிட்டார் பிடிஆர்.தியாகராஜன்..!

By Thiraviaraj RMFirst Published Aug 13, 2021, 11:30 AM IST
Highlights

கிராமங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ததை போல நகர்புற வேலை உறுதியளிக்கப்பு என்கிற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 
 

கிராமங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ததை போல நகர்புற வேலை உறுதியளிக்கப்பு என்கிற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

அவரது பட்ஜெட் அறிவிப்பில், ‘’சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும். நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும். கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம். 1921ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும். பெரும்பாலான துறைகள் கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம். மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.  நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியிட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும், நீர்நிலைகளை மீட்டெடுக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மேம்படுத்தப்படும். நகர்ப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் ’’ என அவர் தெரிவித்துள்ளார். 

நகர்ப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் என்பது இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

click me!