வாரிசு இருப்பவர்களே அரசியலுக்கு வர முடியும்... திருமண விழாவில் திமிரிய மு.க.ஸ்டாலின்..!

Published : Nov 03, 2019, 02:49 PM ISTUpdated : Nov 03, 2019, 02:53 PM IST
வாரிசு இருப்பவர்களே அரசியலுக்கு வர முடியும்... திருமண விழாவில் திமிரிய மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை. ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. வாரிசு இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வரமுடியும். வாரிசு இல்லாதவர்கள் எப்படி வரமுடியும்? என்னை விமர்சித்தவர்கள், நம்மை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அழிந்து போனார்கள் என ஆவேசத்துடன் பேசினார்.

பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளவரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார். 

புதுக்கோட்டை விராச்சிலையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:- திமுக முதல் முறையாக ஆட்சியமைத்த போது சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். 1967-ம் ஆண்டிற்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. தெய்வீக திருமணத்தை நான் எதிர்க்கவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை. ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. வாரிசு இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வரமுடியும். வாரிசு இல்லாதவர்கள் எப்படி வரமுடியும்? என்னை விமர்சித்தவர்கள், நம்மை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அழிந்து போனார்கள் என ஆவேசத்துடன் பேசினார். 

திமுக எப்போதையும் விட மிக வலிமையாக இருக்கிறது. மக்களவை தேர்தலில் நாங்கள் பெற்ற வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் பெறுவோம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்... வேட்டு வைக்கும் ராமதாஸ்..! அதிமுகவுக்கு ரூட் கொடுக்கும் திருமா..!
சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..