மீன் கிடையாது... வலை தரலாம்... ப.சிதம்பரத்தை ட்வீட் போட்டு வெறுப்பேற்றும் எச்.ராஜா..!

By vinoth kumarFirst Published Nov 3, 2019, 1:39 PM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கொசுவலை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கிண்டல் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கொசுவலை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கிண்டல் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் ப,சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை வழக்பில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரால் வெளியில் வரமுடியவில்லை.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, ப.சிதம்பரத்தின் உடல்நிலை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி எய்ம்ஸ் மருத்துவக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏதும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், ப.சிதம்பரத்திற்கு கொசுவலை, முக கவசம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவக் குழு வாரம் ஒருமுறை பரிசோதித்து சிகிச்சை அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தியது. 

மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு.

— H Raja (@HRajaBJP)

 

இந்நிலையில், இதை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்ட எச்.ராஜா மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

click me!