சசிகலாவின் செயல்பாடுகளை கணிக்க 6 மாதம் டைம் கொடுக்கலாம்…சொல்கிறார் கட்ஜு

 
Published : Feb 07, 2017, 08:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
சசிகலாவின் செயல்பாடுகளை கணிக்க 6 மாதம் டைம் கொடுக்கலாம்…சொல்கிறார் கட்ஜு

சுருக்கம்

சசிகலாவின் செயல்பாடுகளை கணிக்க 6 மாதம் டைம் கொடுக்கலாம்…சொல்கிறார் கட்ஜு

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சசிகலாவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று கணிக்க 6 மாதங்கள் டைம் கொடுக்கலாம் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்துத் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, உயர் பதவிக்கு வருபவர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்த, குறைந்தபட்சம் 6 மாத கால அவகாசம் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பதவியேற்பதற்கு முன்பாகவே திறமை குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்றும் . மார்கண்டேய கட்ஜு, கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சராக திரு. அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் இதே கருத்தினை தெரிவித்திருந்ததாக சுட்டிக்‍காட்டியுள்ளார்.

அதேபோன்று, சசிகலாவின்  செயல்திறனை தெரிந்துகொள்ள 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். 

 

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு