மணிப்பூர் சட்டசபை தேர்தலில் களமிரங்கும் இரோம் ஷர்மிளா… முதலமைச்சரை எதிர்த்து போட்டி!

 
Published : Feb 07, 2017, 08:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் களமிரங்கும் இரோம் ஷர்மிளா… முதலமைச்சரை எதிர்த்து போட்டி!

சுருக்கம்

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் களமிரங்கும் இரோம் ஷர்மிளா… முதலமைச்சரை எதிர்த்து போட்டி!

மணிப்பூரில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஓக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா போட்டியிடவுள்ளார்.

60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்‍ கொண்ட மணிப்பூர் மாநிலத்தில், அடுத்த மாதம் மாதம் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, கடந்த 3-ம் தேதி, காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது.

இதில், தெளபால் தொகுதியில், தொடர்ந்து 3-ஆவது முறையாக முதல்வராக உள்ள Okram Ibobi Singh, போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல்வரின் சொந்தத் தொகுதியான தெளபால் மற்றும் தாம் வசித்து வரும் குராய் ஆகிய இரு தொகுதிகளிலும் மனித உரிமை ஆர்வலரும், மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி கட்சியின் தலைவருமான இரோம் ஷர்மிளா போட்டியிடவுள்ளதாக அக்‍கட்சி அறிவித்துள்ளது. 

மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த இரோம் ஷர்மிளா, தன்னுடைய கோரிக்கையை அரசு ஏற்காததால், கடந்த ஆண்டு மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி என்ற புதிய கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்‍கது..

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு