‘அமிதாப் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றுமில்லை’ - செமயாக கலாய்த்த கட்ஜூ

Asianet News Tamil  
Published : May 18, 2017, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
‘அமிதாப் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றுமில்லை’  - செமயாக கலாய்த்த கட்ஜூ

சுருக்கம்

markandeya katju criticizing rajinikanth

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றுமில்லை. மக்களின் பிரச்சனைகளுக்கு இவர் தீர்வு வைத்து இருக்கிறாரா? என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரசிகர்களுடன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் கடந்த 3 நாட்களா கோடம்பாக்கத்தில் உள்ளராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார்.

குழப்பமான அறிவிப்பு

அரசியலுக்கு வருவது குறித்து தௌிவான அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் இன்னும்வௌியிடவில்லை என்றபோதிலும், ஆண்டவன் நினைத்தால், அரசியலுக்கு வரத்தயார் என்று புதிர் போட்டு வருகிறார். அதேசமயம்,ரசிகர்களையும் ஏமாற்றமாட்டேன், அரசியலுக்கு நான் வந்தால், என்னிடம் சேர்பவர்கள் பணம் சேர்க்கும் நோக்கில் இருந்தால் அவர்களை சேர்க்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

 

டுவிட்டர்

 ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

முட்டாள்தனம்

நான் தென் இந்தியர்கள் மீது மிகவும் அதிகமான மதிப்பு, மரியாதையை வைத்து இருக்கிறேன். ஆனால், சினிமா நடிகர்களை புனிதர்களாகக் கொண்டாடுவதும், கடவுளுக்கு இணையாக வைத்து வழிபடும் முட்டாள்தனமான முறையைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வெறிபிடித்தது

கடந்த 1967-68ல் நான் அண்ணாமலை பல்கலையில் படித்துக்கொண்டு இருந்தேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. என்னுடன் படித்த தமிழ்நாட்டு நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்க்கச் சென்று இருந்தேன்.அந்த படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனைக் காட்டும்போது,அவரின் கால்கள்தான் முதலில் காட்டினார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் வெறிபடித்தது போல் நடந்துகொண்டார்கள்.

கோஷம்

அதேபோல, இப்போது தமிழக ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் மீது அவ்வாறு வெறிபிடித்தார்போல் நடந்து கொள்கிறார்கள். அதிலும் சில ரசிகர்கள் நடிகர்ரஜினிகாந்த் அரசியலுக்குள் வர வேண்டும், தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம் போடுகிறார்கள்.

தீர்வு இருக்கா?

நான் கேட்கிறேன்? நடிகர் ரஜினிகாந்துக்கு இதெல்லாம் சரியா வருமா?. மாநிலத்தில் நிலவும் வறுமை, வேலையின்மை, குழந்தைகளின் ஊட்ட சத்துக் குறைபாடு, பசி, விவசாயிகள் பிரச்சினை, மக்களின் சுகாதார பிரச்சினைகள் இவற்றை தீர்க்க ரஜினிகாந்த் ஏதேனும் வழி வைத்து இருக்கிறாரா?, ஏதாவது சிந்தித்து இருக்கிறாரா?.

நான் நினைக்கிறேன் அவ்வாறு எதையும் அவர் சிந்தித்து இருக்கமாட்டார். பின் எதற்கு ரஜினிகாந்த் அரசியலுக்குள் வர வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள்.பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனைப் போல், நடிகர் ரஜினிகாந்துக்கும் மண்டையில் ஒன்றுமில்லை

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Vijayabaskar: இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த விஜயபாஸ்கர்.. ராஜினாமா முடிவுக்குப் பின் தவெகவா... திமுகவா..?
Crop Loan Waiver 2026: பயிர்க்கடன் முழுசா தள்ளுபடி! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!