
இது பார்ட் 2 _க்களின் காலம். பாகுபலி இரண்டாம் பாகம் உலக ரசிகனை ரசனை உரலில் போட்டு இடித்து தள்ளிக் கொண்டிருக்கிறது. நம்ம துரைசிங்கமே சி_3 வரை போய்விட்டார்.
ஆக நிழல் சமாச்சாரமான சினிமாவிலேயே இத்தனை பார்ட்கள் வரும்போது நிஜ பரபரப்புகளில் பார்ட் 2 வரவில்லையென்றால் ஒரு மரியாதை இருக்குமா? முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துக்களாக ஒரு டீம் கிளப்பிவிட்டிருக்கும் சொத்துக்களின் தகவல்களில் பாதியை நேற்று கொடுத்ததற்கு பற்றி எரிந்துவிட்டது நம்ம இணையதளம்.
மீதி சொத்துக்களின் டீடெயில்களையும் கேட்டு ’தலைவா பார்ட் 2வை எப்ப போடப்போறீங்க?’ என்று போன் போல போன் போடுறாங்க, ஆள் மேலே ஆள்விடுறாங்க, நடக்கும்போது காலும் விடுறாங்க. இதுக்கு மேலே மவுனம் காத்தா ரசிகனுங்க ரவுசாகிடுவாங்க எனும் பயத்தில் இதோ அடுத்த பாதி டீடெயில்களையும் தருகிறோம்.
சிதம்பரத்தின் சொத்துக்களாக அந்த டீம் தந்திருக்கும் தரவுகள் உண்மையா பொய்யா என்பதை நாம் ஏற்கனவே சொன்னது போல் ப.சி.யின் தரப்புதான் விளக்க வேண்டும்.
ஓ.கே. இனி சொத்து மேட்டருக்கு வருவோம்...
* துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட், ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்.எல்.சி.’ நிறுவனங்களும் கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
* கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும், தாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும் அமலாக்கதுறை ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
* கார்த்தியின் ‘அட்வாண்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங்’ நிறுவனத்தின் மூலமே ஏர்செல் _ மேக்சிஸ் வர்த்தகத்தின் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கிடைத்த லாப தொகை பலப்பல கோடிகளில்
* கொச்சின், விஜயவாடா, கொல்கத்தா போன்ற இடங்களில் ஜூவல்லரி மேக்கிங் தொடர்பான நிறுவனங்களில் பாதிக்கு பாதி பங்குகள் உள்ளன.
* தேசமெங்கும் கிளைகளையுடைய கேரளத்தின் முக்கிய நிதி நிறுவனம் ஒன்றில் சரி பாதி பங்குகள் கார்த்திக்கு சொந்தம்.
* இந்தியாவுக்குள் என்.ஆர்.ஐ.க்கள் மூலமாக தகல்வல் தொடர்பு துறையில் கால் வைக்கும் வெளிநாட்டு கோடீஸ்வரர்களுக்கு ஃபார்மாலிடீஸ் கிளியரிங் உட்பட பல சேவைகளை செய்யும் நிறுவனங்கள் சிலவற்றை கார்த்தியின் பினாமிகள் நடத்துகிறார்கள்.
_ இப்படி கதை கதையாய் சொல்கிறது அந்த லிஸ்ட்.
இதெல்லாம் உண்மையா அல்லது பொய்யா என்று சிவகங்கை நாட்டுக்காரர் இதையெல்லாம் பற்றி வாய் திறப்பாரா அல்லது ஃப்ரீயா விடுவாரா?