“2 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும்” – எடப்பாடியை அதிர வைத்த மதுசூதனன்...!!!

Asianet News Tamil  
Published : May 18, 2017, 02:03 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
“2 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும்” – எடப்பாடியை அதிர வைத்த மதுசூதனன்...!!!

சுருக்கம்

The rule will be dispersed within 2 months mathusuthan

இரண்டு மாதத்தில் எடப்பாடி ஆட்சி கலைந்து விடும், அப்போது, அனைவரும் எங்கள் அணிக்கு வருவார்கள் என ஒ.பி.எஸ் ஆதரவாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக அகல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. தூக்கி நிறுத்த ஆளில்லாமல் தவித்து வருகிறது.

இதை ஈடு செய்யும் வகையில் எடப்பாடியும் ஏதேதோ செய்கிறார்.ஆனால் நல்ல பெயர் கிட்டியதாக தெரியவில்லை.

அவர் அளிக்கும் நிதியுதவிகளை மக்கள் வங்கி கொள்கிறார்கள். ஆனால் அவர் ஒரு கூட்டம் போட்டால் அதற்கு கூட மக்கள் போக மறுக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இதனிடையே ஒ.பி.எஸ் அணி, எடப்பாடி அணி பேச்சுவார்த்தையும் இழுத்து கொண்டே செல்கிறது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று திண்டுக்கல்லில் ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூட்டம் நடிபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒ.பி.எஸ் எடப்பாடி அரசுக்கு எதிராக பல கருத்துகளை முன்வைத்தார்.

இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஒ.பி.எஸ் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சூழல் நிலவி வருவதாக தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து பேசிய மதுசூதனன் 2 மாதங்களில் ஆட்சி கலைந்து விடும் எனவும், மக்கள் விரும்பினால் அதிமுக இணைப்பு தொடரும் எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி தரப்பினர் அனைவரும் இங்கே வருவார்கள் எனவும், நந்தம் விஸ்வநாதனை போட்டுக் கொடுத்து மந்திரரியானவர் திண்டுக்கல் சீனிவாசன் எனவும் தெரிவித்தார்.

இதனால் இரு அணிகளும் ஒன்றாய் சேருமா சேராதா என்றே பொது மக்களின் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

2026 தேர்தல்: ஆட்சியை தீர்மானிக்கும் அந்த 10 தொகுதிகள் – முழு அலசல்
தலை துண்டிக்கப்படும் ஈரான்... கமெனி- லாரிஜானி மரணத்தால் புதை குழியில் சிக்கிய அமெரிக்கா..!