சீமானை கழுவி ஊற்றிய மாரிதாஸ்... திமுகவிடம் இருந்து வந்த மிரட்டல் போன்..!

Published : Dec 10, 2021, 11:20 AM IST
சீமானை கழுவி ஊற்றிய மாரிதாஸ்... திமுகவிடம் இருந்து வந்த மிரட்டல் போன்..!

சுருக்கம்

மாரிதாஸ் கருத்துக்களின் மீது எனக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவரது கைதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.  

சமீபத்தில் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த மாணவர் மணிகண்டன் மற்றும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் முன் பேசிய வீடியோக்கள் இப்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.  

அதில் சீமானை விமர்சித்துள்ளார். மற்றொரு வீடியோவில் திமுகவிடம் இருந்து மிரட்டல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ’’சீமான் செய்வதெல்லாம் கேவலமான அரசியல். கிறுக்குத்தனமாக வாயில் வந்ததை எல்லாம் பேசுகிறான். சுழற்சி முறையில் பிரதமரை கொண்டு வரச் சொல்கிறார். சுழற்சி முறையில் முதல்வரை கொண்டு வரமுடியுமா? கலெக்டரை கொண்டு வரமுடியுமா? அறிவு வேண்டாம். நான் மதுரைக்காரன். மதுரையில் இருந்து ஒரு முதல்வரை போடுங்க. திருச்சியில இருந்து ஒரு முதல்வரை போடுங்க. அறிவு இருக்கா..? நிர்வாகம்னா சீமானுக்கு என்னான்னு தெரியுமா? நிர்வாகம் எல்லாம் உனக்கு சுட்டுப்போட்டாலும் வராதுடா. தப்பா நினைச்சுக்காதீங்க சீமானை பற்றி பேசினால் எனக்கு பயங்கர கோபம் வருது’’ எனத் தெரிவித்துள்ளார். 

 

ஆனால், மாரிதாஸ் கருத்துடன் முரண்பாடு, ஆனால் கைதை கண்டிக்கின்றேன்: என சீமான் தெரிவித்துள்ளார். ‘’மாரிதாஸ் கருத்துக்களின் மீது எனக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவரது கைதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில் எதையுமே பேசக்கூடாது என்று பாஜக சொல்வதற்கும் திமுக எடுக்கும் முடிவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைது செய்தால் நாங்கள் என்னதான் பேசுவது?

 
அதேபோல தம்பி சாட்டை முருகனையும் வேண்டுமென்றே கைது செய்துள்ளார்கள். இந்த அரசு இவ்வளவு வன்மமாக இருக்கிறது என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. முதுகுளத்தூர் மணிகண்டன் மாணவர் சந்தேகத்துக்கிடமான உயிரிழந்தது குறித்த மாரிதாஸ் கருத்தை நான் ஆதரிக்கிறேன். தமிழக அரசை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தேன்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கும் தற்போது முதல்வராக மாறிய பின் அவர் பேசிய பேச்சு இருக்கும் நிறைய வேறுபாடுகளை பார்க்கிறேன். ஹெலிகாப்டர் விபத்தையும் திமுகவையும் தமிழகத்தையும் இழுப்பது தவறு தான். இங்கே திமுகவா ஹெலிகாப்டரை வாங்குகிறது? மாரிதாஸ் ஆதரவு கட்சி தான் வாங்குகிறது? இந்த ஹெலிகாப்டரை கூட நம்மால் தயாரிக்க முடியாத அளவில் இருக்கிறோம்? வெளிநாட்டிலிருந்து ஏன் வாங்குகிறார்கள்?

மாரிதாஸ் என்னையும் பலமுறை விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால் நான் ஒன்றும் அவர் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை. அவரை கைது செய்தது தவறு என்று சீமான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மற்றொரு வீடியோவில், மாரிதாஸ், ’’ஒன்றரை வருஷத்துல திமுக ஆட்சிக்கு வந்தால் நீதாண்டா முதல் குறி. அடேங்கப்பா... தலையை சீவிடுவ போடா அப்படி என்றுசொன்னேன்.  நான் பேசாமல் என்னைக்கு இருந்தேன். போன் செய்து ஒன்றரை வருஷத்துல உனக்கு இருக்கு என்று மிரட்டினான். போங்கடா பல பேரை பார்த்தாச்சு’ என்று சொல்லி விட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மாரிதாஸ் கைதுக்கு சமூகவலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி