T.T.V. Dhinakaran : “திமுக குடும்ப ஆட்சி.. அதிமுக டிராமா காட்சி..” தெறிக்கவிட்ட டிடிவி தினகரன்

By Raghupati R  |  First Published Dec 10, 2021, 11:14 AM IST

திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி, அதிமுக கட்சியில் நடப்பது டிராமா காட்சி என கடுமையாக விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.


தஞ்சையில்  முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் படத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ திமுக ஆட்சிக்கு வருவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.வந்த பிறகு மறந்து விடுவார்கள். 7 பேர் விடுதலை ஆக இருக்கட்டும், சிறுபான்மையினரின் நலன் ஆக இருக்கட்டும்,  நாங்கள் தான் காவலன் என்று ஏமாற்றுவார்கள். திமுகவை நம்பி மக்களும் ஏமாந்து,  திருந்தி இருப்பார்கள் என்று வாக்களித்தார்கள். ஆனால், அவர்கள் திருந்தவே இல்லை என்பது இந்த ஆறு மாதத்திற்குள்ளாகவே தெரிகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசை எதிர்த்து வீர வசனம் பேசி, கருப்புக்கொடி காட்டுவார்கள். அதிமுக அரசின் அப்போதைய கவர்னர் ஆய்வு செய்த போது கருப்புக்கொடி காண்பித்த திமுகவினர், தற்போது ஆட்சிக்கு வந்ததால் அமைதியாக செல்கிறார்கள்.ஆட்சிக்கு வரவேண்டும்,அவர்களது குடும்பம் அவர்களைச் சேர்ந்தவர்கள் வளமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது குறிக்கோள். தமிழ்நாட்டின் நலனிலும், வளத்திலும் என்றைக்குமே அவருக்கு அக்கறை இல்லை. மக்களின் மன்னிப்பு தன்மையை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். 

அதிமுகவில் நடந்த ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கேலிக்கூத்தாக ட்ராமா போல் நடந்து முடிந்துள்ளது, அவர்கள் உட்கட்சி சண்டையில் அவர்களை தலைமை கழகத்தில் குண்டர்களை வைத்து தொண்டர்களை தாக்கியுள்ளார்கள். அவர்களது உட்கட்சி சண்டையின் காரணமாக அம்மாவுடைய நினைவு நாள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அடிதடியில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்கள் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறை ஏவல் துறையாக நடந்துள்ளது. அமமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறது.

click me!