மு.க.ஸ்டாலின் அறிக்கையில் இத்தனை தப்பா..? கடவுளே..!

By Thiraviaraj RMFirst Published Aug 21, 2019, 4:07 PM IST
Highlights

தமிழ் உணர்வு மற்றவர்களை விட தங்களுக்கு அதிகம் என அங்கலாய்த்து கொள்வது திமுக உடன்பிறப்புகளுக்கு எப்போதுமே அலாதி பெருமை. தமிழை வைத்து கட்சியை வளர்த்து ஆட்சியை பிடித்து இப்போதும் தமிழை வைத்து அரசியல் நடத்தி வருகிறது திமுக. 
 

தமிழ் உணர்வு மற்றவர்களை விட தங்களுக்கு அதிகம் என அங்கலாய்த்து கொள்வது திமுக உடன்பிறப்புகளுக்கு எப்போதுமே அலாதி பெருமை. தமிழை வைத்து கட்சியை வளர்த்து ஆட்சியை பிடித்து இப்போதும் தமிழை வைத்து அரசியல் நடத்தி வருகிறது திமுக. 

ஆனால் வெற்று வார்த்தைகளில் மட்டுமே தமிழ் தமிழ் என முழங்கி வருகிறதோ என்கிற சந்தேகம் எழத் தொடங்கி இருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒற்றை அறிக்கை. டெல்லியில் நாளை திமுக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அது குறித்து ஒரு அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் தான் எத்தனை தவறுகள்?

அந்த அறிக்கையில், ‘’1947ல் இருந்து இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்த காத்மீரை இன்றைக்கு அடக்குமுறைகள் ஊரடங்கு உத்தரவுகள் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசு தனிமை படுத்தி வைத்திருக்கிறது. காஷ்மீரில் என்ன நடக்கிறது? அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் கதி என்ன ஆனது? சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இன்னும் ’ஏன்’ காஷ்மீர் மாநிலம் ஸ்தம்பித்து நிற்பது ’ஏன்’ என்பது பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திரமோடி அவர்களோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களோ கவலைபடுவதாக தெரியவில்லை. காஷ்மீரில் இருட்டடிப்பு செய்து விட்டு அங்கே ஜனநாயக படுகொலையை செய்து விட்டு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை அமல்படுத்தி விட்ட்ய் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி, ‘’காஷ்மீரில் சாதித்து விட்டோம்’ என்று கூறி வருவது ஒரு வகை அரசியலே தவிர நாட்டின் மீதுள்ள பற்றாகவோ, பாசமாகவோ தெரியவில்லை. 

பொருளாதாரத்தில் திணறி தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகிற அவல நிலைமை பற்றி கவலைபடாமல் அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டுகொள்’லா’மல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவரை கைது செய்வது அங்கு மக்களை சந்திக்க விரும்பும் அகில இந்திய காங்கிரஸ் தலைவரை கைது செய்வது அங்கு மக்களை சந்திக்க விரும்பும் அகில இந்திய கட்சிகளின் அரடியல் தலைவர்களை தடுத்து நிறுத்துவது என்று அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. 

ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றத் துடித்து இப்போது காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்கி விட்டது பாஜக அரசு என்பதை பார்க்கும்போது இவர்களுக்கு ஜனநாயகத்திலும் நம்பிக்கையில்லை. இந்தியாபை கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கையில்லை என்பதையே எடுத்துரைக்கிறது.

 

தேசத் தந்தை மகாத்’மாக’ பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் ’வல்லபாய்’ படேல் போன்ற அரும்பெரும்  தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் போராடி பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கை’களை’ மூலம் பிடிங்கி கொள்ள மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீரவேண்டியது ஜனநாயகத்தின் ’மீது’ நம்பிக்கை கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்துத் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரி நாளை காலை 11 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு என்பதை தெரிவித்துக் ந்கொள்ள விரும்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார். 

அவர் விடுத்துள்ள இந்த ஒரு பக்க அறிக்கையில் 11 பிழைகள் உள்ளன.

click me!