"செப்டம்பர் 12 முடியட்டும்..." பயங்கர சம்பவத்துக்கு நாள் குறித்த பழனியப்பன்!! அதிர்ச்சியில் தினகரன்...

By sathish kFirst Published Aug 21, 2019, 4:00 PM IST
Highlights

அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் உத்தரவை, துணைப் பொதுச்செயலாளர்பழனியப்பன் மீறிவிட்டாரா என்று தர்மபுரி மாவட்ட அமமுக வட்டாரத்தில் பெரும் கலவரமாக வெடித்துள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் உத்தரவை, துணைப் பொதுச்செயலாளர்பழனியப்பன் மீறிவிட்டாரா என்று தர்மபுரி மாவட்ட அமமுக வட்டாரத்தில் பெரும் கலவரமாக வெடித்துள்ளது.

அமமுக துணைப் பொதுச்செயலாளரான பழனியப்பன் மகள் கல்யாணம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 50,000 அழைப்பிதழ்கள் அடித்து கொடுத்து வருகிறார் பழனியப்பன். திருமணத்தை மிக பிரம்மாண்டமாக தினகரன் தலைமையில் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் பெங்களூரு சிறைக்கு தினகரனோடு சென்று சசிகலாவுக்கும் பத்திரிகை வைத்துவிட்டு வந்தார் பழனியப்பன்.

இதற்கிடையில் சென்னை வானரத்தில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பேசிய தினகரன், “ திமுக நமது எதிரி, அதிமுக நமது துரோகி. இருவரிடமும் உறவுகள் வைத்துக்கொள்ளக்கூடாது, அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக்கூடாது, நாமும் அவர்களை அழைக்கக்கூடாது” என்று பேசினார். அப்போதே, ‘இது பழனியப்பன் மகள் கல்யாண விழாவுக்கு அவர் மாற்று கட்சியினரையும், முக்கிய அரசியல் பிரமுகர்களையும் அழைக்கும் எண்ணத்தில் இருந்ததால், அதை  மனதில் வைத்துக் கொண்டு தினகரன் இப்படி ஒரு உத்தரவு போட்டாராம். அவர்தான் தன் வீட்டு கல்யாணத்திற்கு அதிமுகவினரை அழைக்கத் திட்டமிட்டு வந்துள்ளார். தினகரனின் இந்த திடீர் கட்டளையால் அதிமுக, திமுக முக்கியப் பிரமுகர்களுக்குப் பத்திரிகைக் கொடுக்க யோசித்துவந்த பழனியப்பனை அவர்களே ஏன் இன்னும் பத்திரிக்கை கொடுக்கவில்லை எனக் கேட்க்கிறார்களாம். 

இதனால் மனம் நொந்துப்போன பழனியப்பன், பெத்த பொண்ணு கல்யாணம், கிரேண்டா பண்ணனும்னு ஆசைப்பட்டது தப்பா?. அமைச்சரா இருந்தப்ப எல்லா கட்சியினருக்கும் பொதுவான ஒரு ஆளா தானே இருந்தேன்? பழனியப்பன் இருந்தாரு தினகரன் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அதிமுக, திமுகவைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகளுக்கும் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கும் அழைப்புக்களைக் கொடுத்து வருகிறாராம், அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கும் மகள் திருமண அழைப்பிதழைக் கொடுத்துவருகிறார். இதையறிந்த அமமுக பிரமுகர்கள் அண்ணனே தினகரன் உத்தரவை மீறிவிட்டார் என்று பேசத்துவங்கிவிட்டார்கள்.

அமமுகவில் கடைசியாக இருக்கும் முக்கிய புள்ளியான பழனியப்பன் தினகரன் மீது வருத்தத்தில் இருப்பதால், பிஜேபி, அதிமுக மற்றும் தனது நெருங்கிய நண்பர்கள் செந்தில் பாலாஜி, தங்க தமிழ் செல்வம் உள்ளிட்ட சிலரும் அமமுகவை விட்டு விலகி வரும் படி பேசி வருகிறார்களாம். ஆனால் பழனியப்பனோ, தினகரன் தலைமையில் திருமணம் நடக்கும் என பத்திரிக்கை அடித்ததாலும், குடும்பத்தில் முக்கியமான விழாவை வைத்துக்கொண்டு கட்சி மாறினால் அது சரியாக இருக்காது என்றும் நினைக்கிறாராம். ஆனால், பழனியப்பனுக்கு நெருக்கமான சிலர், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி கல்யாணம் நடந்து முடிந்த பின், தினகரனின் மனநிலையை பொறுத்தே அடுத்த கட்டமாக முடிவெடுப்பார் என சொல்கிறார்கள்.

click me!