மு.க.ஸ்டாலினுக்கு எல்லாம் மஞ்சள் மஞ்சளா தெரியுதே... ராமதாஸ் கிண்டல்..!

By Thiraviaraj RMFirst Published Aug 21, 2019, 3:24 PM IST
Highlights

மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் எல்லாம் மஞ்சளாகவே தெரியும். இப்போது ஸ்டாலின் என்ன கண்ணாடி அணிந்திருக்கிறார்? என பாம நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் எல்லாம் மஞ்சளாகவே தெரியும். இப்போது ஸ்டாலின் என்ன கண்ணாடி அணிந்திருக்கிறார்? என பாம நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது நல்ல நோக்கம் கொண்டதல்ல. ஊழல்களை மறைக்கவே இப்படி செய்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் - மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் எல்லாம் மஞ்சளாகவே தெரியும். இப்போது ஸ்டாலின் என்ன கண்ணாடி அணிந்திருக்கிறார்?’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது நல்ல நோக்கம் கொண்டதல்ல. ஊழல்களை மறைக்கவே இப்படி செய்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் - மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் எல்லாம் மஞ்சளாகவே தெரியும். இப்போது ஸ்டாலின் என்ன கண்ணாடி அணிந்திருக்கிறார்?

— Dr S RAMADOSS (@drramadoss)

 

வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் மட்டும் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், சேலம், கோவை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களும் 30 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்கள். தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஈரோடு கடலூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் மக்கள்தொகை 20லட்சத்துக்கும் கூடுதல். 

நிர்வாக வசதிக்காக இந்த மாவட்டங்களும் பிரிக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில் ஊழல்களை மறைக்கவே எடப்பாடி பழனிசாமி புதியமாவட்டங்களை அறிவித்து இருக்கிறார் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பாமகநிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.  
 

click me!