முதல் ஆளாய் முந்திக்கொண்ட மன்சூர் அலிகான்..! கோர்ட் வளாகத்தில் பரபரப்பு..!

By ezhil mozhiFirst Published Jul 8, 2019, 4:07 PM IST
Highlights

143 நாட்களுக்கு பிறகு திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை, தற்போது சென்னை எழும்பூர் கோர்ட் வளாகத்திற்குள் நீதிபதியின் முன் ஆஜர்படுத்த உள்ளனர்.

143 நாட்களுக்கு பிறகு திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை, தற்போது சென்னை எழும்பூர் கோர்ட் வளாகத்திற்குள் நீதிபதியின் முன் ஆஜர்படுத்த உள்ளனர்.

தன்னை கடத்தப்பட்ட விவகாரம் நீதிபதியிடம் மட்டுமே கூற முடியும் என சிலர் தெரிவித்ததை தொடர்ந்து இன்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டு இருந்தார்.முகிலன்  தெரிவிக்கும் விவரத்தின்படி,அடுத்து ஒரு பரபரப்பை ஏற்படுத்த கூடும் என்பதால், அனைத்து தரப்பினரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் முகிலனுக்கு முழு ஆதரவு கொடுத்து வந்த மன்சூரலிகான் முகிலன் வருவதற்கு முன்பாகவே கோர்ட்டில் காத்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய முகிலன் காணாமல் போன பிறகு, "முகிலன் தற்போது உயிரோடு தான் இருக்கிறாரா? அவருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலை தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என ஆவேசமாக பேசியிருந்தார்.

மேலும் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வளர்ந்துவிட்டது... சொற்ப நாட்களிலேயே எதை வேண்டுமென்றாலும் கண்டுபிடித்து விடலாம். ஆனால் முகிலனை கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர் என தெரிவித்திருந்தார். முகிலன் விவகாரத்தில் அனைவரும் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக உள்ளதால் அவருக்கு முன்பாகவே தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவிக்க மன்சூர் அலிகான் நீதிமன்றம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!