
அண்மையில் பிரதமர் மோடி, சென்னைக்கு வந்த போது, 'நாம் தமிழர் கட்சியின்' தலைவர் சீமான் மற்றும் தொண்டர்கள் பிரதமருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியதற்காக கைதுசெய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சீமான் மீது வேறு சில வழக்குகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்போவதாக, செய்திகள் பரவியதால். சீமான் அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தின் முன்பு, நடிகர் மன்சூர் அலிகான்... நாம் தமிழர் கட்சி தொண்டர்களுடன் சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் சீமானை கைது செய்வதென்றால் தன்னையும் கைது செய்ய வேண்டும் என மன்சூர் அலிகான் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
போலீசார் மன்சூர் அலிகானை கலைந்து செல்லும்படி கூறியும், அவர் அங்கிருந்து செல்லாததால்... மன்சூர் அலிகானை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதே நேரம், சீமானை போலீசார் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே விட்டு விட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஜாமீனில் வெளியே வந்த மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'நாம்தமிழர் கட்சியினருக்கு சிறை செல்வது கோவிலுக்கு செல்வது போன்று என கூறினார். மேலும் அறவழிப் போராட்டத்தின் மூலம் நான் இங்கு கைது செய்யப்படிருந்தாலும், கையெழுத்து திருத்தணியில் போட வேண்டுமாம் பார்த்தீர்களா...? மக்களே என் நிலையயை என்று அங்கும் காமெடியாகவே பேசினார் மன்சூர் அலிகான்.