BREAKING அமமுக வேட்பாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. டிடிவி அதிர்ச்சி

Published : Mar 21, 2021, 05:16 PM ISTUpdated : Mar 22, 2021, 12:12 PM IST
BREAKING அமமுக வேட்பாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. டிடிவி அதிர்ச்சி

சுருக்கம்

மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் உடல்நலக்குறைவு காரணமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் உடல்நலக்குறைவு காரணமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ்  அறிவிக்கப்பட்டதில் இருந்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் மன்னார்குடி தொகுதியில் மிகவும் வலுவான வேட்பாளர் மற்றும் உள்ளூர் ஆதரவு நிறைய இருப்பது எல்லோரும் தெரிந்ததே. அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு இவர் சிறந்த போட்டியாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில்,  அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.காமராஜ் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!