அதிமுக ஒரு ஆலமரம்... யார் வேண்டுமானாலும் போகட்டும்... ஓ.பி.எஸ் தெனாவெட்டு..!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2021, 4:25 PM IST
Highlights

அதிமுக என்பது ஒரு ஆலமரம். யார் இதில் இருந்து சென்றாலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

அதிமுக என்பது ஒரு ஆலமரம். யார் இதில் இருந்து சென்றாலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு உறுதுணையாக ஆதரவாக நின்றவர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம். அவர் மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொண்டார். இது ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? ''ஏற்கனவே கூறியதுதான் பிரகாசமாக இருக்கிறது.

தர்ம யுத்தத்தின் போது உங்களுக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.முத்துராமலிங்கம் அதிமுகவில் இருந்து விலகியதற்கு காரணம் என்ன?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது மிகப்பெரிய ஆலமரம், இதில் இருந்து யார் சென்றாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிடைக்காத அதிமுக நிர்வாகிகள், திமுக- அமமுகவில் இணைவது அதிமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்குமா? எந்தவித பாதிப்பும் இல்லை'' என அவர் பதில் அளித்தார்.

click me!