குஷியான செய்தி... பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published : Mar 21, 2021, 03:53 PM IST
குஷியான செய்தி... பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கியது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  பின்னர், கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கொரோனா நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு அடுத்தடுத்து  கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதனால் நாளை முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே சில கல்லூரிகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பது தொடர்பாகவும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
PREV
click me!

Recommended Stories

ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?
அனல் பறக்கும் தேர்தல் களம்..! பிப்.1 முதல் 234 தொகுதிகளிலும் பிரசாரத்தை தொடங்கும் திமுக..