அட கடவுளே... முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் தொண்டர்கள்...!

By vinoth kumarFirst Published Mar 21, 2021, 4:31 PM IST
Highlights

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநிலத்தின் பல பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக தினமும் 3 ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிராவில் தினமும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியிலும் கொரோவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மும்பையில் பொதுமக்கள் கூடும் இடத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எனக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தது. நானும் சோதனை செய்து கொண்டேன். எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் கவனகுறைவுடன் இல்லாமல் அனைவரும் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!