வெற்றிகரமாக 81 வது அத்தியாயத்தில் மன் கி பாத்.. சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் என மோடி மக்களுக்கு அழைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2021, 12:12 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி (மன் கி பாத்) மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதுவரை 80 அத்தியாயங்கள் முடிந்துள்ள நிலையில் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி 81 வது அத்தியாயத்தில் அவர் பேச உள்ளார்.

செப்டம்பர் 26, 2021 வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் (மன் கி பாத்) 81-வது பதிப்பு நிகழ்ச்சிக்கான தங்களின் யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பகிருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி (மன் கி பாத்) மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதுவரை 80 அத்தியாயங்கள் முடிந்துள்ள நிலையில் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி 81 வது அத்தியாயத்தில் அவர் பேச உள்ளார். 

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வரும் அவர் அந்நிகழ்ச்சியில் நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களை பேசி வருகிறார். இந்நிலையில் 81வது  ஆவது அத்தியாயத்தில் அவர் பல்வேறு முக்கிய தகவல்களை நாட்டு மக்களுக்கு வழங்க உள்ளார். எனவே அந்நிகழ்ச்சியை ஒட்டி மனதின் குரல் நிகழ்ச்சிக்கான யோசனைகளை NaMo செயலி அல்லது MyGov வலைத்தளம் அல்லது 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரும் 26-ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள இந்த மாதத்திற்கான மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து பல சுவாரஸ்யமான யோசனைகள் கிடைத்த வண்ணம் உள்ளன. எனவே உங்களது யோசனைகளை NaMo செயலி அல்லது MyGov வலைத்தளம் அல்லது 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்ந்து பதிவுசெய்யுங்கள்”,என்று கூறியுள்ளார். 

Have been getting several interesting inputs for this month’s , which will take place on the 26th. Keep sharing your insights on the NaMo App, MyGov or record your message on 1800-11-7800. https://t.co/OR3BUI1rK3

— Narendra Modi (@narendramodi)

இந்த நிகழ்ச்சியில் உங்கள்  எண்ணங்களையும் சிந்தனைகளையும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருங்கள், அதிக எண்ணிக்கையான தொலைபேசி அழைப்புகளை கேட்கவும் பதிவுகளைப் பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றும், உங்கள் சிந்தனைகளே மனதின் குரல் நிகழ்ச்சியின் பலம் என்றும், 130 கோடி இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக மனதின் குரல் ( மன் கி பாத்) மாற வேண்டுமென இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில்அவர்  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!