அதிர்ச்சி செய்தி.. முதல்வர் ஸ்டாலின் வீடு முன்பு தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Oct 5, 2021, 10:46 AM IST
Highlights

கடந்த மாதம் 27ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு முன்பு தீக்குளித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெற்றிமாறனின் தலையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு முன்பு தீக்குளித்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா ஜமீன் தேவர்குளம் காலனி தெருவை சேர்ந்த வெற்றிமாறன்(48). இவர் தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவராக இருந்தார். உள்ளாட்சி தேர்தலில், தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.அதே பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமலா என்பவரின் கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் அவர் சமூகத்தை சார்ந்த நபர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, வெற்றி மாறன் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;- ஓ.பி.எஸின் அதிர்ஷ்டம் அது.. சசிகலாவுக்கு அது பலன் அளிக்காது.. பூங்குன்றன் சொல்லும் ரகசியம்..!

 இதை கேட்ட வெற்றிமாறனை, அவரது சாதி பெயரை கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நெடுமாறன் கடந்த மாதம் 27ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு முன்பு தீக்குளித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெற்றிமாறனின் தலையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 45 சதவீத தீக்காயங்களுடன் வலியால் துடித்துக்கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையும் படிங்க;- மதுவால் உயிரிழந்த 5 வயது சிறுவன்.. இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை இழுத்து மூடுங்கள்.. கொதிக்கும் அன்புமணி.!

மேலும்,சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று, வெற்றிமாறனிடம் நலம் விசாரித்தார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெற்றிமாறன் நேற்று மாலை உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!