பாஜக ஆளும் ஸ்டேட்ல வச்சுக்கோங்க ! இங்கெல்லாம் அது நடக்காது ! புதிய வாகன சட்டத்துக்கு மம்தா எதிர்ப்பு !!

By Selvanayagam PFirst Published Sep 12, 2019, 7:12 AM IST
Highlights

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என மம்தா பானர்ஜி  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  மக்களை கஷ்டப்படுத்தும் எந்த சட்டத்தையும் மேற்குவங்க மாநிலத்துக்குள் பாஜக அரசு கொண்டுவர முடியாது என்றும் அவர் தில்லாக கூறியுள்ளார்.
 

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், விதிமுறைகளை வாகன  ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த அபராத உயர்வுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  செய்தியாள்ர்களிடம் பேசிய அவர், ''திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும்  என்றும் அதனால்  இதை இங்கு செயல்படுத்தமாட்டோம் என்றும் மம்தா தெரிவித்தார்.

மேலும் மக்களை கஷ்டப்படுத்தும் எந்த சட்டத்தையும் மாநிலங்கள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது என்றும் மம்தா திட்டவட்டமாக தெரிவித்தார்.
திருத்தியமைக்கப்பட்ட அபராதங்களை அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி  இதனைத் தெரிவித்துள்ளார்

click me!