மேற்கு வங்கத்தில் பொதுமுடக்கம் எப்போது வரை தில்லாக அறவித்தமுதல்வர் மம்தா .!!

By T BalamurukanFirst Published Jun 24, 2020, 9:52 PM IST
Highlights

கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களான மகாராஷ்ட்ரா தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கூட அறிவிக்காத பொதுமுடக்கத்தை மம்தா அறிவித்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,173 ஆக உயர்ந்துள்ளது.இதில் உயிரிழப்பு 591 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் அம்மாநில முதல்வர் மம்தா அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன் பிறகு கொரோனாவை கட்டுபடுத்துவதற்காக ஜீலை 31ம் தேதி வரை பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறார். கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களான மகாராஷ்ட்ரா தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கூட அறிவிக்காத பொதுமுடக்கத்தை மம்தா அறிவித்திருக்கிறார்.

எந்த  மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் ஜூலை  31-ம்தேதி வரை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அசத்தியிருக்கிறார்.மேற்கு வங்கத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா பாதிப்பு,  தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து  விரிவாக விவாதிக்கப்பட்டது. 3 மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில், மாநிலத்தில் பொது முடக்கத்தை ஜூலை 31ம்தேதி வரையில் நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி  அறிவிப்பை வெளியிட்டார்.  அதே நேரத்தில் சில தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் இன்று மட்டும் 445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,173 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குணம் அடைந்தவர்கள் உயிரிழப்புகளை  தவிர்த்து மாநிலத்தில் 4,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று மற்ற கட்சிகள் கருத்து தெரிவித்தன. இதை ஏற்றுக் கொண்ட மம்தா, இந்த பிரச்னையை எதிர்கொள்வது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா பாதிப்புக்கு ஆகும் செலவுகளின் உச்ச வரம்பை அரசு விரைவில் நிர்ணயிக்கும். அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றும், அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு போராடி கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

click me!