மம்தா பானர்ஜியாகிய நான்… அக். 7ல் பவானிபூர் எம்எல்ஏவாக பதவியேற்பு..

Published : Oct 04, 2021, 08:35 PM IST
மம்தா பானர்ஜியாகிய நான்… அக். 7ல் பவானிபூர் எம்எல்ஏவாக பதவியேற்பு..

சுருக்கம்

வரும் 7ம் தேதி பவானிபூர் எம்எல்ஏவாக மம்தா பானர்ஜி பதவியேற்க உள்ளார்.

கொல்கத்தா:  வரும் 7ம் தேதி பவானிபூர் எம்எல்ஏவாக மம்தா பானர்ஜி பதவியேற்க உள்ளார்.

மேற்கு வங்கத்தில் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் 57 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மம்தா பானர்ஜி பவானிபூர் தேர்தலில் களம் இறங்கினார்.

இந்த தேர்தலில் வென்றால் தான் மம்தா பானர்ஜி முதலமைச்சராக நீடிக்க முடியும். எதிர்பார்த்தது படியே பாஜகவை மிரள வைத்து மம்தா பானர்ஜி கிட்டத்தட்ட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் கலக்கலாக வெற்றி பெற்றார். தம்மை வெற்றி பெற வைத்த மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றியும் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அவரது வெற்றியை தொடர்ந்து முதலமைச்சராக மம்தா பானர்ஜி நீடிப்பதில் இருந்த சிக்கலும் தீர்ந்தது. இந் நிலையில் வரும் 7ம் தேதி பவானிபூர் எம்எல்ஏவாக அவர் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!