அதிமுகவில் முக்கிய பெண் நிர்வாகி அதிரடி நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு..!

Published : Oct 04, 2021, 08:03 PM IST
அதிமுகவில் முக்கிய பெண் நிர்வாகி அதிரடி நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு..!

சுருக்கம்

கழகத்தின் கொள்ளை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் அதிரடி நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்ளை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின்  கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் கழக வேட்பாளருக்கு எதிராக தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தினாலும் ஜெயப்பிரியா ( மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்)

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!