நேற்று மோடியின் மனைவியுடன் சந்திப்பு... இன்று மோடியுடன் சந்திப்பு... மம்தா பானர்ஜியைக் கிண்டலடிக்கும் பாஜக!

By Asianet TamilFirst Published Sep 18, 2019, 9:58 AM IST
Highlights

டெல்லி செல்வதற்காக மம்தா பானர்ஜி நேற்று மாலை கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது விமான நிலையத்தில் மோடியின் மனைவி யசோதா பென்னை சந்தித்தார். இருவரும் சில நிமிடம் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிகொண்டார்கள்.  ஜார்க்கண்ட் செல்லும் வழியில் கொல்கத்தா வந்ததாக யசோதாபென் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துவரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்துவருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தொடங்கி பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை, மம்தா பானர்ஜி, டெல்லியில் இன்று மாலை சந்தித்து பேச உள்ளார். 
இதற்கிடையே டெல்லி செல்வதற்காக மம்தா பானர்ஜி நேற்று மாலை கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது விமான நிலையத்தில் மோடியின் மனைவி யசோதா பென்னை சந்தித்தார். இருவரும் சில நிமிடம் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிகொண்டார்கள்.  ஜார்க்கண்ட் செல்லும் வழியில் கொல்கத்தா வந்ததாக யசோதாபென் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
பிரதமர் மோடியை மம்தா கடுமையாக விமர்சித்துவந்த நிலையில், இந்தச் சந்திப்புக் குறித்து பாஜகவினர் கிண்டலடித்துவருகிறார்கள்.  இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஹியா கூறுகையில், “சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு  சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அவரை விசாரித்தால், மம்தா அமைச்சரவையில் பாதி பேர் சிறைக்கு சென்றுவிடுவார்கள். அதனால், முன்னாள் காவல் ஆணையரை காப்பாற்றவே பிரதமரை சந்திக்கிறார் மம்தா.இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார். 

click me!