#BREAKING பவானிபூர் இடைத்தேர்தல்.. பாஜகவை கதறவிட்ட மம்தா.. 58,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!

By vinoth kumarFirst Published Oct 3, 2021, 3:11 PM IST
Highlights

அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார். ஆனாலும் அவர் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். 

மேற்குவங்கம் பவானிபூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவின் பிரியங்கா டிப்ரேவாலை விட 58,832 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார். ஆனாலும் அவர் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். தேர்தல் ஆணையம் விதிகள்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவிகளில் இல்லாதவர்களும் முதல்வராக பதவி ஏற்கலாம். ஆனால், அவர்கள் 6 மாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் மம்தா பானர்ஜி நவம்பர் 5-ம் தேதிக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.

அவரது பாரம்பரிய தொகுதியான பவானிபூர் தொகுதியில் சோபன் தேவ் சட்டோபாத்யாயா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். அவர் மம்தா பானர்ஜிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.பவானிபூர் தொகுதியுடன் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட ஜங்கிபூர், ஷாம்கர்கன்ச் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மம்தா பானர்ஜிக்கும், பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரிவாலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டது. மொத்தம் 21 சுற்றுகள்  முடிவில் மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்மாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.

click me!