முதல்வராக பதவி ஏற்று ஒரே மாதத்தில் அதிரடி... பிரதமராக திட்டம்... பி.கே.வுடன் 2026 வரை ஒப்பந்தம் நீட்டிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jun 16, 2021, 10:56 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சி வலுவிழந்துள்ளதால், பாஜகவுக்கு எதிராக பிற கட்சிகளை இணைத்து அடுத்த மக்களவை தேர்தலில் மூன்றாவது கூட்டணியை உருவாக்கி தலைமை தாங்கி பிரதமராகும் திட்டத்தை மம்தா கையிலெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்காக தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தார் ஐபேக் நிறுவனத்தை சேர்ந்த பிரஷாந்த் கிஷோர். தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. இந்நிலையில்,  பிரசாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனத்துடன், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும், திரிணமுல் காங்கிரஸின் ஒப்பந்தத்தை 2026ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளார் மம்தா பானர்ஜி. 

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் தமிழகத்தில் தி.மு.க., மற்றும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்.,குக்கு, பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தார். இந்த இரு கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளன.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின், ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திரிணமுல் காங்கிரஸ் நீட்டித்துள்ளது. வரும், 2026ல் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் உட்பட பல தேர்தல்களில் கட்சிக்கு வியூகங்களை வகுத்து தருவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும், 2024 மக்களவை தேர்தலில், பா.ஜ.க.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், தேசிய அளவில் பெரும் தலைவராக தன்னை நிலைநிறுத்த மம்தா ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே, ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தம், 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி வலுவிழந்துள்ளதால், பாஜகவுக்கு எதிராக பிற கட்சிகளை இணைத்து அடுத்த மக்களவை தேர்தலில் மூன்றாவது கூட்டணியை உருவாக்கி தலைமை தாங்கி பிரதமராகும் திட்டத்தை மம்தா கையிலெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

click me!