தமிழகத்தில் களமிறங்கும் மம்தா பானர்ஜி.. சட்டமன்ற தேர்தலில் 51 இடங்களில் போட்டியிட முடிவு.. தெறிக்கும் தேர்தல்.

Published : Feb 10, 2021, 03:48 PM IST
தமிழகத்தில் களமிறங்கும் மம்தா பானர்ஜி.. சட்டமன்ற தேர்தலில் 51 இடங்களில் போட்டியிட முடிவு.. தெறிக்கும் தேர்தல்.

சுருக்கம்

அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு சார்பில் 51 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தனர்.  

வரும் சட்மன்ற தேர்தலில் தமிழ்நாடு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 51 இடங்களில் போட்டியடப்போவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கலைவாணன் கூறியுள்ளார். கூட்டணி குறித்து  கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. 

முதல் நாளான புதன்கிழமை (இன்று) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளை தனித்தனியாக சந்தித்து அலோசனை மற்றும் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், கொரோனா காலத்தில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றும், இடம்பெயர்ந்தும் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஒரு ஓட்டு கூட விணாகாத வண்ணம் தேர்தல் ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். 

மேலும் வயதானவர்கள் எளிதில் வாக்கு செலுத்தக்கூடிய வகையில் தபால் வாக்குகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். தேர்தல் நேரத்தில் இலவச பொருட்கள் அளிக்காத வகையில் கண்காணிப்புகள் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு சார்பில் 51 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!