விஷயம் கேள்விப்பட்டதும் ரொம்ப வேதனையா போச்சு! விரைவில் மீண்டு வாங்க! மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் ட்வீட்!

Published : Jun 28, 2023, 09:32 AM ISTUpdated : Jun 28, 2023, 09:49 AM IST
விஷயம் கேள்விப்பட்டதும் ரொம்ப வேதனையா போச்சு! விரைவில் மீண்டு வாங்க! மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் ட்வீட்!

சுருக்கம்

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டு நாள் பிரச்சாரத்தை முடித்து கொண்டு கொல்கத்தாவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி திரும்பிக் கொண்டிருந்தார். 

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் காயமடைந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைந்து உடல்நலம் தேற விரும்புகிறேன் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டு நாள் பிரச்சாரத்தை முடித்து கொண்டு கொல்கத்தாவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக ஹெலிகாப்டர் பயங்கரமாக நடுங்கியதை அடுத்து செவோக் விமான தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  இதனால் ஹெலிகாப்டரில் இருந்த முதல்வர் மம்தா பானர்ஜியின் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க;- கருணாநிதி குடும்பம் பலனடைய DMKக்கு வாக்களியுங்கள்! உங்கள் குடும்பம் பலனடைய BJPக்கு வாக்களியுங்கள் -பிரதமர்மோடி

இதனையடுத்து, மேற்குவங்க முதல்வர் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் முதல்வரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைந்து உடல்நலம் தேற விரும்புகிறேன் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியதால் காயமடைந்துள்ள மாண்புமிகு மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மமதா பேனர்ஜி அவர்களின் உடல்நிலை குறித்து ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறேன். அவர் விரைந்து தேறிட வாழ்த்துவதோடு, மீண்டும் அவர் முழு உடல்நலத்துடன் திரும்ப வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  நடுவானில் தள்ளாடி அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!