பழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.!! மழையால் சரிந்து விழுந்தது..!!

Published : Oct 16, 2019, 06:43 PM ISTUpdated : Oct 16, 2019, 06:57 PM IST
பழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.!! மழையால் சரிந்து விழுந்தது..!!

சுருக்கம்

இந்நிலையில் நேற்று  மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது,  இதில் கங்கைகொண்டான் மண்டபத்தின் மேல் பகுதியில் இருந்த கருங்கற்கள் திடீரென சரிந்து விழுந்தது அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வழியாக யாரும் செல்லாதவாறு சாலையில் கற்களை அடுக்கி  தடுத்தனர்.    

சீன அதிபர் ஜி ஜின்பிங்  வந்தபோது காவல்துறை கட்டுப்பாட்டு அறை அரசியல் போட்ட மாமல்லபுரம் கங்கைகொண்டான் கல் மண்டபம் நேற்று பெய்த மழையால் சரிந்து விழுந்தது. ஆனால் இதனால் அதிஷ்டவசமாக விபத்து ஏதும் ஏற்படவில்லை. 

மாமல்லபுரத்தில் மிகப்பழமை வாய்ந்த மண்டபங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, கங்கைகொண்டான் கல்மண்டபம்.  முறையான பராமரிப்பின்றி சிதலமடைந்து காணப்பட்ட அந்த கல் மண்டபத்தின் கீழ் அமர்ந்து ஏராளமானோர் பூ உள்ளிட்ட காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் வந்த போது அந்த  கல் மண்டபம் காவல்துறையின் கட்டுப்பாட்டு   அறையாக செயல்பட்டது.  இந்நிலையில் நேற்று  மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது,  இதில் கங்கைகொண்டான் மண்டபத்தின் மேல் பகுதியில் இருந்த கருங்கற்கள் திடீரென சரிந்து விழுந்தது அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வழியாக யாரும் செல்லாதவாறு சாலையில் கற்களை அடுக்கி  தடுத்தனர்.

இந்நிலையில் கற்கள் சரிந்து விழுந்த போது அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. உடனே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் கல்மண்டபத்தை புணரமைக்க  வேண்டும் என தொல்லியல் துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!