அந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Oct 16, 2019, 6:13 PM IST
Highlights

50 ஆண்டுகளாக எங்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்திய திராவிட கட்சிகள் எங்களுடைய பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. 

பட்டியலின பிரிவில் இருப்பது தேவேந்திர குல வேளாளருக்கு கறை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

பட்டியலின வகுப்பில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் மற்றும் வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக்கோரி ஆதிதிராவிட நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவை சந்தித்து கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்சி பிரிவில் இருப்பது தேவேந்திர குல வேளாளர்களுக்கு கறை என்று கூறினார். தொழில், வர்த்தக ரீதியாக தேவேந்திர குல வேளாளர் மக்கள் உயர வேண்டும் என்பதால், உடனடியாக தேவேந்திர குல வேளாளர் என்று குறிப்பிட்டு அரசாணையை வெளியிட வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

 

50 ஆண்டுகளாக எங்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்திய திராவிட கட்சிகள் எங்களுடைய பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பூச்சாண்டி எல்லாம் எங்களிடம் வேண்டாம். ஆமாம் இனி திராவிடத்திற்கு டேஞ்சர் நாங்க மட்டும் தான்.  பிற்படுத்தப்பட்டர்கள் எல்லாம் ஒரே சாதியாகப் பார்க்கப்படுவதில்லை. இடஒதுக்கீட்டை அனுபவித்தாலும், வெளியே வன்னியர், தேவர், நாடார் என கௌரவமாக சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆனால், எஸ்சி அனைவரும் ஒரே சாதியினராகப் பார்க்கப்படுகிறார்கள். ‘அவன் எஸ்சி’என கூசாமல் சொல்கிறார்கள். தேவேந்திரர்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை திராவிடவாதிகளுக்கு / தலித் என்.ஜி.ஓக்களுக்கு புரிய வாய்ப்பில்லை. ஏனெனில் நாங்கள் அவமானத்தைச் சுமந்தால் தான் அவர்கள் அதைக்காட்டி பணம் பறிக்க முடியும். நாங்கள் தன்மானத்தோடு வாழ முடிவெடுத்துவிட்டோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!