தருமபுர ஆதினம் விவகாரம்... பல்லக்கு தூக்க தடை குறித்து மதிமுக பிரமுகர் பரபரப்பு கருத்து!!

Published : May 04, 2022, 03:14 PM IST
தருமபுர ஆதினம் விவகாரம்... பல்லக்கு தூக்க தடை குறித்து மதிமுக பிரமுகர் பரபரப்பு கருத்து!!

சுருக்கம்

தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். 

தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது ஆதீனகர்த்தராக பதவியேற்ற ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வெள்ளிப் பல்லக்கில் அமரந்து வீதி உலா வந்தார். அந்த பல்லக்கை ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்து வந்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர். அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதாலும் இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் ஶ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள பரம்பரை தர்மகர்த்தாவை நீக்கி, கோவிலுக்கு சொந்தமான 144 ஏக்கர் விளை நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவிலை கொண்டுவரக் கோரி திருவள்ளூர் மாவட்டத்தில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருவாடுதுறை அதீனத்தில் பல்லக்கிலும் யாரும் ஏற வேண்டாம். பல்லக்கினை யாரும் தூக்க தேவையில்லை. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜகவின் கைக்கூலி நடிகை இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்பதை மறுக்கவிலை. ஆனால் இந்தி மொழியைத் திணிக்க வேண்டாம் என்பதே திராவிட இயக்கத்தின் அடிநாதம். கோவில்களை வைத்து எவரும் கொள்ளை அடிப்பதை தடுக்க தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார் .

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!