கமல்ஹாசனின் சினிமாக்களை கூர்ந்து கவனித்தீர்களானால் அந்த விஷயங்கள் நன்கு புரியும். மிகவும் சென்சிடீவான காட்சிகளில் ஹீரோவான கமல்ஹாசன் அப்படியே உயிரைக் கொடுத்து, உருக்கி உருக்கி நடிப்பார். ஆனா அவருக்கு பக்கத்தில் இருக்கும் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் சொதப்பித் தள்ளுவார்கள். ஒட்டுமொத்த சீனியின் சீரியஸ்னஸும் இவர்களால் கெடும்.
கமல்ஹாசனின் சினிமாக்களை கூர்ந்து கவனித்தீர்களானால் அந்த விஷயங்கள் நன்கு புரியும். மிகவும் சென்சிடீவான காட்சிகளில் ஹீரோவான கமல்ஹாசன் அப்படியே உயிரைக் கொடுத்து, உருக்கி உருக்கி நடிப்பார். ஆனா அவருக்கு பக்கத்தில் இருக்கும் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் சொதப்பித் தள்ளுவார்கள். ஒட்டுமொத்த சீனியின் சீரியஸ்னஸும் இவர்களால் கெடும்.
கிட்டத்தட்ட இதே நிலைதான் கமலின் அரசியலிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாற்பது தொகுதி எம்.பி. வேட்பாளர்கள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை கடந்த ஞாயிறன்று அறிவித்த கமல், நாமினேஷன் மற்றும் பிரசாரத்தில் அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்! எப்படி புதுமையாய், கருத்தாய் அரசியலை அணுக வேண்டும் என்று வகுப்பெடுத்து அனுப்பினார்.
ஆனால், வேட்பு மனு தாக்கலின் போதே அவரது கட்சியினர் சொதப்பிக் கொண்டாடிவிட்டனர் கணிசமான இடங்களில். முறையான ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் உரிய நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் போய் மறுநாள் வந்தது, வேட்புமனுவோடு செலுத்த வேண்டிய டெபாசீட் பணம் குறைவாக இருந்ததால் அதிகாரிகளிடமே கடன் கேட்டது, திடீரென கட்சி மாறி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்தது! என்று மாநிலமெங்கும் ம.நீ.ம. வேட்பாளர்கள் ரகம் ரகமாக கூத்தடித்தனர்.
சொந்த மாநிலத்தில் கட்சி நிலைமை இப்படி கதறிக் கிடக்க, திரிணாமுள் காங்கிரஸுடன் கூட்டணி போட மேற்குவங்காளம் சென்று, ‘அந்தமான் தீவுகளில் மம்தாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போகிறேன்.’ என்று கெத்து பேட்டி கொடுத்த கமல்ஹாசனின் காதுகளில் இந்த கூத்துக்கள் ஓதப்பட்டதாம். நம்மவர் அப்படியே டென்ஷனாகி உட்கார்ந்துவிட்டாராம். அரசியலுக்கு நம்மவர்கள் புதிது என்பதால் சில தடுமாற்றங்கள் இயல்பு! எல்லாம் சரியாகும்! என்று நிர்வாகிகளுக்கு ஆறுதல் சொன்னாராம்.
ஆனால் கட்சி தாவல் விஷயங்களையெல்லாம் பார்த்து நொந்து போகுதலில் உச்சம் தொட்டவர், மாநில நிர்வாகிகளிடம் “இவங்களையெல்லாம் வெச்சுக்கிட்டு நான் எப்படி கட்சி நடத்தி, மாற்று அரசியல் செஞ்சு, மக்கள் ஆதரவை பெற்று, ஆட்சியை பிடிக்குறது! பேசாம போயி புள்ளைங்களை படிக்க வைங்கடாப்பா.” என்று புலம்பலாக பேசினாராம் தேவர்மகன் பட கிளைமாக்ஸ் வசனம் போல். கற்பனை சினிமா வேற, யதார்த்த அரசியல் வேற! அங்கே நல்லா நடிக்காத ஜூனியர்களை அவுட் ஆஃப் ஃபோகஸ் பண்ணலாம் இல்லேன்னா ஆளை மாத்தலாம். ஆனால் இங்கே எத்தனை பேரை மாத்துவீங்க? எத்தனை பேரை ஃபோகஸ் அவுட் பண்ணுவீங்க?