இந்த இரண்டு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி.. இல்லையென்னால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி- மநீம அதிரடி

By Ajmal Khan  |  First Published Jan 23, 2024, 4:13 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என நாங்கள் இதுவரை சொல்லவில்லை, நீங்களாக்கத்தான் சொல்கிறீர்கள், எங்களது இரண்டு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 
 


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கை, தொகுதிப்பங்கீட்டு குழுவை அமைத்துள்ளது. இந்தநிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தேர்வு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

திமுகவுடன் கூட்டணியா.?

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதிமய்யம் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. அதன் படி, தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது.  கமல்ஹாசனின் சிந்தனைகளோடும், கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணி என இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் இந்த நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி என்றும் இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் எனவும் அறிவித்துள்ளது. மேலும்  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன், தேர்தல் பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள் என செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

வைகுண்ட சாமி கோயிலுக்கு இபிஎஸ் சென்றது ஏன்? பாஜகவைப் பார்த்து பயப்படுகிறதா அதிமுக.? அரசியல் அஸ்திரம் எடுபடுமா?
 

click me!