எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக சேர்மன்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

By vinoth kumar  |  First Published Jan 23, 2024, 2:52 PM IST

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 24 வார்டுகள் கொண்ட உசிலம்பட்டி நகராட்சியில் திமுக- 12, அதிமுக -9, அமமுக -2, காங்கிரஸ்-1 ஆகியோர் வெற்றி பெற்றனர். 


திமுக உசிலம்பட்டி சேர்மன் சகுந்தலா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 24 வார்டுகள் கொண்ட உசிலம்பட்டி நகராட்சியில் திமுக- 12, அதிமுக -9, அமமுக -2, காங்கிரஸ்-1 ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் தலைவர் பதவிக்கு 10-வது வார்டு கவுன்சிலர் செல்வியையும், துணைத்தலைவர் பதவிக்கு 19-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் தேன்மொழியையும் வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்தது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

ஆனால் நகர செயலாளர் தங்கமலை பாண்டி தனது மனைவி பாண்டி அம்மாளுக்கு தலைவர் பதவி வழங்கப்படாததால் அவரது ஆதரவாளரான சகுந்தலாவை போட்டியிட வைத்து அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் பெற்றி பெற்றார். இதனையடுத்து உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கப்பாண்டி கட்சியில் திமுக தலைமை நீக்கியது. 

இதையும் படிங்க;-  EPS vs Stalin: சேலம் அதிமுகவின் கோட்டை! யாரும் நுழைய முடியாது, நுழைந்தால் விரட்டியடிப்பார்கள்- சீறும் எடப்பாடி

இந்நிலையில், திமுக உசிலம்பட்டி சேர்மன் சகுந்தலா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார். மேலும்,  திமுக சேர்மன் சகுந்தலாவின் மகனும், மதுரை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், திமுக முன்னாள் செயற்குழு உறுப்பினர் சோலை ரவி உள்ளிட்டரும் அதிமுகவில் இணைந்தனர்.

click me!