Ramadoss: அரசு திட்டங்கள் பெறுவதற்கு தடுப்பூசியை கட்டாயமாக்குங்க.. அரசுக்கு ஐடியா கொடுக்கும் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Dec 2, 2021, 1:38 PM IST
Highlights

ஒமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் ஐயங்களும், அச்சங்களும் இருந்தால் அதை அரசு போக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் ஐயங்களும், அச்சங்களும் இருந்தால் அதை அரசு உடனே போக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உருமாறிய கொரோனா வைரசான ஓமிக்ரான் பாதிப்பு தற்போது 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகையால், தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 

தற்போது, தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 19ம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைக, சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் செல்வோருக்கும்  தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று, அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான மக்களின் ஆர்வம் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வாரத்திற்கு வாரம் குறைந்து வருவது ஆரோக்கியமான அடையாளம் அல்ல.

ஒமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் ஐயங்களும், அச்சங்களும் இருந்தால் அதை அரசு போக்க வேண்டும்.

ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் ஐயங்களும், அச்சங்களும் இருந்தால் அதை அரசு போக்க வேண்டும்!

— Dr S RAMADOSS (@drramadoss)

 

பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று, அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!