உங்களுக்கு ஒண்ணும் புரியவில்லை மோடி... என்னை நிதியமைச்சராக்குங்கள்... அடம்பிடிக்கும் சுப்ரமணியசுவாமி..!

Published : Jan 11, 2020, 05:07 PM IST
உங்களுக்கு ஒண்ணும் புரியவில்லை மோடி... என்னை நிதியமைச்சராக்குங்கள்... அடம்பிடிக்கும் சுப்ரமணியசுவாமி..!

சுருக்கம்

பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால் அவர் என்னை நிதியமைச்சராக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.   

பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக அக்கட்சியில் இருந்து கொண்டே எதிராக கருத்து கூறி வருகிறார் சுப்ரமணியசுவாமி. இந்நிலையில் அவர், ‘’ரிசர்வ் வங்கி  முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவில் இருந்து வந்த பைத்தியக்காரர். அவர் வட்டி விகிதங்களை அதிகரித்தார், எனவே நிதி மூலதன செலவு அதிகரித்தது. பல சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்படுவதற்கு ரகுராம் ராஜன் தான் பொறுப்பு. 

நீங்கள் ஜே.என்.யூக்குச் சென்று பட்டம் பெறலாம். ஆனால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. பிரதமருக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால் அவர் என்னை நிதியமைச்சராக்க வேண்டும். ஆனால், எனது பிரச்சினை என்னவென்றால், நான் ஒரு பொருளாதார நிபுணர் மட்டுமல்ல. நான் ஒரு அரசியல்வாதியும் கூட. நிதியமைச்சர் பதவியில் நான் நன்றாக செயல்பட்டால் அடுத்து பிரதமர் பதவி கேட்பேன் என கட்சியினர் பயப்படுகிறார்கள்.

பொருளாதாரம் மோசமான காலங்களில் உள்ளது. எல்லாமே கீழ்நோக்கிச் செல்கிறது. வரி பயங்கரவாதம் 'கட்டுப்படுத்தப்பட வேண்டும். போக்கு தொடர்ந்தால் வங்கிகள் மூடப்படும், வங்கி சாரா நிதிநிறுவனங்கள் மூடப்படும் பேரழிவிற்கு வழிவகுக்கும்’’ எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு