தினகரன், வேற வழியில்லாம இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பிச்சாரு: இப்படி நக்கலடிப்பது டி.டி.வி.யின் வலது கரம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 11, 2020, 4:18 PM IST
Highlights

தனியாக கட்சி துவங்கி, அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பது தினகரனின் ஆசை அல்ல. வேறு வழி இல்லாமல் தொடங்கப்பட்ட கட்சிதான் அ.ம.மு.க. இதுவே உண்மை.

*அசுரன், பரியேறும் பெருமாள், குண்டு!  ஆகிய படங்களை புரட்சிப் படம் என ஆதரித்த அரசியல் கட்சித் தலைவர்கள் ‘திரெளபதி’ படத்தையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதுதானே. திரைத்துறையில் இனி ஜாதி ஆதிக்கம் கூடுதலாக இருக்கத்தான் செய்யும். -ஜே.எஸ்.கே.கோபி (திரைப்பட தயாரிப்பாளர்)

*நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு இருப்பது வழக்கம். கடந்தாண்டு ஆகஸ்டு முதல் அக்டோபர் மாதம் வரை பெய்த பரவலான மழையால் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால்  பனியின் தாக்கம் இல்லை. நடப்பாண்டில்  வியாழன் முதல் உறைபனி பொழியத் துவங்கியுள்ளது. 
- பத்திரிக்கை செய்தி...

*நாட்டை கொள்ளையடிக்கும் பணியை, தி.மு.க.வுக்கு மன்மோகன் சிங் ஆட்சியில் வாய்ப்பு  கொடுத்ததால் அக்கட்சி பேசவில்லை. ஆனால் இப்போது தி.மு.க. கொதிக்கிறது. தி.மு.க.வுக்கு எப்போதும் ஹிந்துக்கள் மீது நம்பிக்கை இல்லை. அதேபோல் காங்கிரசுக்கு சீக்கியர்கள் மீது நம்பிக்கை இல்லை. -ஸ்மிருதி இரானி (மத்தியமைச்சர்)

*நாட்டில் பொருளாதார சூழல் சரியில்லை என்பதை உள்நாட்டு மொத்த உற்பத்தியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பொருளாதார வளர்ச்சிக்குறைவானது வளர்ச்சிக்குறைவு, வர்த்தகர்கள், ஏழைகள், தினசரி கூலி வேலைக்குச் செல்வோர், மாத ஊதியம் பெறுவோர், தொழிலாளர்கள் ஆகியோரை கடுமையாக பாதிக்கும். 
- பிரியங்கா (காங்கிரஸ் பொதுச்செயலாளர்)

*மத்திய அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, மஹாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியில் போராட்டம் நடத்த வேண்டும். மத்திய அரசின் சில திட்டங்களால் நாட்டில் ஒரு பிரிவு மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாம், முகாமில் தங்க வேண்டியிருக்குமோ என்று மக்கள் பயப்படுகின்றனர். ஆனாலும், அரசை எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் வன்முறைக்கு இடமளிக்க கூடாது. -சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ் தலைவர்)

*தி.மு.க.வின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளில் வேலை இல்லாமல் தவிப்போருக்கு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். முடிந்த அளவுக்கு பலருக்கு வேலை வாய்ப்புகான வழிகளை உருவாக்கிட வேண்டும்.  -மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கிறார். அமைச்சரை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் மிரட்ட முடியாது. எங்களுக்கு உத்தரவு போட  வேண்டும் என நீங்கள் நினைத்தால், அது நடக்காது.கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது எங்களின் கடமை. யாருக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். 
-எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

*இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி, மக்களை திசை திருப்பும் வேலையில் தி.மு.க. ஈடுபட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தால், சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்படி யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திட முடியுமா? -ஆர்.பி.உதயக்குமார் (வருவாய்த்துறை அமைச்சர்)

*மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, பாசிசத்தை நோக்கி குதிரை வேகத்தில் அதிவேகமாக செல்கிறது. பாசிச கொள்கைக்கு நாட்டில் இடமில்லை. எனவே நாட்டின் நலன் மீது அக்கறை கொண்ட அனைத்து தலைவர்களும், மக்களை வழிநடத்த தயாராக இருக்க வேண்டும்.  -கீ.வீரமணி (திராவிடர் கழகத்தலைவர்)

*சென்னையில் மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளில், பெண்கள், சிறுமியர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, உறுதுணையாக இருக்கும் சட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். -விமலா (உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி)

*தனியாக கட்சி துவங்கி, அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பது தினகரனின் ஆசை அல்ல. வேறு வழி இல்லாமல் தொடங்கப்பட்ட கட்சிதான் அ.ம.மு.க. இதுவே உண்மை. அ.தி.மு.க.வை வீழ்த்தினால்தான் அந்த கட்சியைக் கைப்பற்ற முடியும். அதற்காக பல முயற்சிகளை நாங்கள் எடுத்தாக வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அம்மா ஆட்சி அமையும் வரையில் எங்களின் போராட்டம் தொடரும். -வெற்றிவேல் (அ.ம.மு.க. பொருளாளர்)
:    

-விஷ்ணுப்ரியா

click me!