"உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க திராணி இருக்கிறதா?" - எடப்பாடிக்கு மைத்ரேயன் பகிரங்கச் சவால்...!

Asianet News Tamil  
Published : May 21, 2017, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
"உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க திராணி இருக்கிறதா?" - எடப்பாடிக்கு மைத்ரேயன் பகிரங்கச் சவால்...!

சுருக்கம்

maithreyan challenged edappadi to announce election date

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை எம்பயர் டவரைப் போன்று வலுவானதாகவும், கம்பீரமாகவும் காணப்பட்ட அதிமுக என்ற பிரம்மாண்டம், அவர் மறைந்ததும் கடற்கரை மண்ணில் கட்டிய வீட்டைப் போன்று சிறு காற்றுக்கே தாக்குப் பிடிக்கமுடிமால் சரிந்து சரிவைச் சந்தித்து விட்டது. 

ஒரு கட்சியை தாங்கிப் பிடித்த தலைவர் மறைந்து விட்டால் அக்கட்சிக்குள் பிணக்குகளும் பிளவுகளும் ஏற்படுவது இயல்பான ஒன்றே. அவை மிக விரைவில் சரிசெய்யப்பட்டு கட்சி மீண்டும் பழைய கம்பீரத்தை எட்டிப்பிடித்து விடும்.

ஆனால் அதிமுகவில் அப்படி நடக்கவில்லை. விளைவு அதிமுக அம்மா....! அம்மா அதிமுக.....! என்று பிளவுபட்டு ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர். 

இந்நிலையி்ல் சென்னை ராயப்பேட்டையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் மைத்ரேயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் எடுத்த எடுப்பிலேயே, உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கும் திராணி முதல் அமைச்சர் எடப்பாடிக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

சசிகலா, தினகரனை ஒதுக்கிவிட்டதாக ஜெயக்குமார் கூறியது நாடகம் என தெரிந்துவிட்டது என்று தெரிவித்த மைத்ரேயன்,95 சதவீதம் தொண்டர்கள் ஓ.பி.எஸ்.பக்கம் தான்உள்ளனர் என்று கூறினார். 

PREV
click me!

Recommended Stories

6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!