
ஒ.பி.எஸ் பிரதமரை சந்தித்தற்கு போட்டி சந்திப்பு நடத்தியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியை சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக பிரச்சனைகள் குறித்து மனு அளித்து வந்தார். அவருடன் எம்.பி. மைத்ரேயன், முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
அதைதொடர்ந்து தமிழக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இன்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் ஒ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர், ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒ.பி.எஸ் பிரதமரை சந்தித்தற்கு போட்டி சந்திப்பு நடத்தியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் பிரதமரை சந்தித்தது குறித்து ஆலோசனை நடத்தினோம். எடப்பாடி பிரதமர் மோடியை சந்தித்த போது யாரெல்லாம் உடன் இருந்தனர் என்பதை விளக்க வேண்டும்.
எடப்படிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க தைரியம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் சசிகலாவின் பினாமி ஆட்சியே நடைபெற்று வருகிறது.
தர்ம யுத்தத்தின் தாரக மந்திரமான இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக தெரிவித்தார்.