ஆட்டம் போட்ட அமித்ஷா... உலுக்கி உட்காரவைக்கும் சகலகலா சி.எம்..!! பயங்கர பிளான்...!!

Published : Jan 10, 2020, 06:06 PM ISTUpdated : Jan 10, 2020, 06:22 PM IST
ஆட்டம் போட்ட அமித்ஷா... உலுக்கி உட்காரவைக்கும் சகலகலா சி.எம்..!!  பயங்கர பிளான்...!!

சுருக்கம்

மீண்டும் லோயா  வழக்கை ஆரம்பத்திலிருந்து விசாரிக்க வேண்டுமென மகாராஷ்டிரா அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது  .  மகாராஷ்டிராவின்  ஆளும் கட்சியான சிவசேனா இதை  ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது 

நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து மீண்டும் முதலிலிருந்து  வழக்கு விசாரிக்கப்படும் என்றும் இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்  என்றும் மகாராஷ்டிர அரசு சார்பாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார் .  எனவே அமித்ஷாவுக்கு எதிராக சிவசேனா இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பது  இதன் மூலம் உறுதியாகி உள்ளது.   அதாவது சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை முக்கிய குற்றவாளியாகக் கருதி சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது அப்போது அதன் நீதிபதியாக இருந்தவர் லோயா அந்த வழக்கில் அமித்ஷா ஒவ்வொரு முறையும் நேரில்  ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் . 

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு நீதிபதி லோயா  திடீரென மரணமடைந்தார் .  அதனைத் தொடர்ந்து அமித்ஷாவும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் லோயா 2014ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார் என கூறப்பட்டது ,  ஆனாலும் அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்ததால் அவர் மாராடைப்பால் மரணமடைய வாய்ப்பில்லை என சந்தேகம் எழுந்தது .  லோயாவின்  மரணத்திற்குப் பின்னர் அமைச்சர் சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் இருந்து மொத்தமாக விடுவிக்கப்பட்டார் .  இது மேலும்  சந்தேகத்தை அதிகப்படுத்தியது .  இது குறித்து விசாரிக்க வேண்டும் என பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .  இதுகுறித்து விசாரித்த சிபிஐ லோயா  மாரடைப்பால் மரணம் அடையவில்லை என்றும் , நீதிமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்தது . அதேபோல்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட உடல்கூறு பரிசோதனையும் அவர் பின்னந்தலையில் அடிபட்டு இறந்ததை  உறுதி செய்தது. ஆனால் ஏன் இதை  மருத்துவர்கள் மறைத்து விட்டனர் என்ற  கேள்விகளும் எழுந்தது .

 

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ,  லோயா  மரணம் இயற்கையானது என்றும் அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய அவசியம் எதுவும் இல்லை என்றும் கூறியது .  இந்நிலையில் மீண்டும் லோயா  வழக்கை ஆரம்பத்திலிருந்து விசாரிக்க வேண்டுமென மகாராஷ்டிரா அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது  .  மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியான சிவசேனா இதை  ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது . இந்நிலையில்  மூன்று  கட்சிகளும் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது .  இது குறித்து தெரிவித்துள்ளார் என்சிபி மூத்த அமைச்சர் நவாப் மாலிக் லோயாவின்  மரணம் இயற்கையானது அல்ல என்பதற்கான ஆதாரத்தை திரட்டி வருவதாகவும் புதிய ஆதாரம் கிடைத்தவுடன் விசாரணை துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார் . 
 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்