அம்மா உணவகம் போல் மகாராஷ்டிராவிலும் தொடக்கம்...!! 10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு திட்டத்தை தொடங்கிய உத்தவ் தாக்கரே அரசு...!!

Published : Jan 27, 2020, 08:00 PM ISTUpdated : Jan 28, 2020, 11:03 AM IST
அம்மா உணவகம் போல் மகாராஷ்டிராவிலும் தொடக்கம்...!!   10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு திட்டத்தை தொடங்கிய உத்தவ் தாக்கரே அரசு...!!

சுருக்கம்

உணவகம் தொடங்கப்பட்ட முதல்நாளான நேற்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிட்டனர். நீண்ட வரிசையில் நின்று உணவை வாங்கிச் சாப்பிட்ட மக்கள் உணவு சுவையாகவும், தரமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.    

தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு வழங்கும் திட்டத்தை உத்தவ் தாக்கரே அரசு நேற்று தொடங்கியது. சிவ போஜன் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகங்கள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு உணவகம் வீதம் முதல்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " 10 ரூபாய்க்கு மதிய உணவுத் திட்டத்தில் 2 கோதுமை சப்பாத்திகள், ஒரு காய், சாதம், பருப்பு ஆகியவை இருக்கும். ஹோட்டல்களில் 50க்கு விற்கப்படும் சாப்பாடு மக்களுக்கு 10 ரூபாய்க்கு தரப்படுகிறது நாள் ஒன்றுக்கு 500 சாப்பாடுகள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.உணவகம் தொடங்கப்பட்ட முதல்நாளான நேற்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிட்டனர். நீண்ட வரிசையில் நின்று உணவை வாங்கிச் சாப்பிட்ட மக்கள் உணவு சுவையாகவும், தரமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த  கேண்டீன்கள் பெரும்பாலும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதி, மார்க்கெட், மாவட்ட மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றின் அருகே திறக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது மாநிலத்தில் ஆட்சியில் உள்ள சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்த கூட்டணி அரசின் முக்கிய வாக்குறுதி 10 ரூபாய்க்குச் சாப்பாடு வழங்கும் திட்டமாகும். அதை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது
 

PREV
click me!

Recommended Stories

இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
12 நிமிடத்தில் உரையை முடித்த விஜய்.. அப்செட்டான தொண்டர்கள்..!