இந்த 6 லட்சம் பேருக்கு ரயில்களை ஏற்பாடு செய்யுங்க .!! மத்திய அரசை அதிரவிட்ட மராட்டிய முதலமைச்சர்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 23, 2020, 6:43 PM IST
Highlights

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை பந்த்ரா ரயில்நிலையம் அருகே திரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் தங்களை ஊருக்கு  அனுப்பி வைக்குமாறு போராட்டம் நடத்தி பின்னர் போலீசார் தடியடி நடத்தி களைக்கப்பட்டனர். 
 

கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில்  மகாராஷ்டிராவுக்கு அதிக அளவில் வென்டிலேட்டர்கள் , மருத்துவ  பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை  மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் எனவும்  மக்களுக்கு ரேஷன் கார்டு உணவு தானியங்களை வழங்க மத்திய அரசின் விதிகளை தளர்த்த வேண்டும் எனவும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார் . நாடு முழுவதும் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது .  இதில் மகாராஷ்டிரா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது .  கொரோனா பட்டியலில் மகாராஷ்டிராவே  முதல் இடத்தில் உள்ளது.  இந்நிலையில் உத்தவ் தாக்ரே  மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் . மகாராஷ்டிரத்தில் வேலை தேடி வந்த 6 லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் மராட்டியத்தில் முடங்கியுள்ளனர்.

  

அவர்களை மகாராஷ்டிர அரசு உரியமுறையில் முகாம்களில் தங்க வைத்து அவளுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து வருகிறது .  இந் நிலையில் முகாம்களில் தவிக்கும் தங்களை  தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி  வைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .  இந்நிலையில் மராட்டியத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க  மத்திய அரசு சிறப்பு ரயில்களை  இயக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.  மராட்டியத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தங்களுக்கும் கொரோனா வந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர் .  இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை பந்த்ரா ரயில்நிலையம் அருகே திரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் தங்களை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டம் நடத்தி பின்னர் போலீசார் தடியடி நடத்தி களைக்கப்பட்டனர். 

இந்த சம்பவத்தை அடுத்து  முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மத்திய குழுவுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார் அப்போது தெரிவித்த அவர்,  வரும் மே மாதம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என தாகவல்கள் வருகின்றன .  இதற்குள் வெளிமாநில தொழிலாளர்களை   சொந்தமாநிலத்திற்கு  அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .  இதற்காக வழிகாட்டுதலையும் வெளியிடவேண்டும் ,  உரிய நேரத்திற்குள் இதை பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்  என கூறியுள்ளார் .  அதுமட்டுமின்றி கொரோனா பெருமளவில் துபாய் மற்றும் அமெரிக்கா வழியாக தான் மராட்டியத்திற்கு வந்தது .எனவே  துபாயில் இந்த வைரஸ் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை இந்தியா ஆராய வேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் . 

 

click me!