இன்று மஹாளய அமாவாசை... ஜெ. பெயரில் தர்ப்பணம் கொடுத்த அமைச்சர்...!

By vinoth kumarFirst Published Oct 8, 2018, 2:41 PM IST
Highlights

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மறைந்த ஜெயலலிதா பெயரில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காவிரியில் புனித நீராடி இன்று தர்ப்பணம் செய்தார்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மறைந்த ஜெயலலிதா பெயரில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காவிரியில் புனித நீராடி இன்று தர்ப்பணம் செய்தார். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்று இரவு 11.30 காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு அரசியல் குளறுபடிகள் எற்பட்டன. 

இதனை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பல்வேறு தகவல்களை ஆணையம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பூரண நலம்பெற வேண்டி அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். மண்சோறு சாப்பிடுதலும், தீச்சட்டி ஏந்துவதும், யாகம் நடத்துவதுமாக பல்வேறு வழிமுறைகளைக் மேற்கொண்டனர். தொண்டர்களில் பலர் மொட்டை அடித்துக் கொண்டும் ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்தனர். ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் யாகங்களும், பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனாலும், உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்று இரவு காலமானார். அவரது மறைவு அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது மறைவை அடுத்து, சென்ற வருடம், அதே நாளில் திதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டும், ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் செய்யப்பட்டது. மஹாளய அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

 

இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காவிரி நீரில் புனித நீராடி முன்னோர்கள் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் தர்ப்பணம் செய்தார். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி அந்திம புஷ்கர நிறைவு விழா, இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில், அமைச்சர் மணியன், முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் தர்ப்பணம் செய்தார்.

click me!