
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, சவப்பெட்டியில் ஜெ.வைப் போல பொம்மை ஒன்றையும்,அதன் மேல் தேசியக் கொடியையும் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்கிடையே மாஃபா பாண்டியராஜன் மீது தேசியக் கொடியை அவமதித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். ஆனால் இதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது.