ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வச்சு செய்யும் கொரோனா.. இதுவரை 31 பேர் பாதிப்பு.. இதுதான் சமூக பரவலா?

By vinoth kumarFirst Published Aug 10, 2020, 4:38 PM IST
Highlights

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் மற்றும் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்குக் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் மற்றும் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்குக் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாகவே சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினரை தொடர்ந்து எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ இ.ராமர் (69). இவர் கடந்த 7-ம் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். நேற்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, பரிசோதனை செய்துகொண்ட தனியார் மருத்துவமனையில் ராமர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

click me!